Thipaan / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் கொம்மாதுறை பிரதேசத்தில் சனிக்கிழமை(01) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அரசாங்கப் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்மாதுறையை சேர்ந்த கலையரசி பாலச்சந்திரன் (வயது 58) எனும் ஆசிரியையே விபத்தில் பலியானவர் என்று செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
'எனது மனைவி அதிகாலையில் உடற்பயிற்சிக்காக செல்வது வழக்கம். அதேபோன்று சனிக்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் நெடுஞ்சாலையின் ஓரமாக உடற்பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த போது வாழைச்சேனைப் பக்கமிருந்து மட்டக்களப்புப் பக்கம் எதிரே வந்த கென்ரர் ரக வாகனம் எனது மனைவியை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது' என கொல்லப்பட்ட ஆசிரியையின் கணவர் பாலச்சந்திரன் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தலையிலும் காலிலும் காயம்பட்டு வீதியில் வீழ்ந்த ஆசிரியை உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் அவர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாதசாரியை மோதிவிட்டு தப்பிச் சென்ற மர்ம வாகனத்தைத் தேடிவருவதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025