2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர் சமூகசேவை மன்றத்தின் நிர்வாகத் தெரிவு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் சமூக சேவை மன்றத்தின் நிர்வாகத் தெரிவு ஏறாவூரிலுள்ள அதன் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை நடைபெற்றது.

நடப்பாண்டின் நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். தலைவராக ஏ.ஜுனைட், உபதலைவராக எஸ்.எம்.அலியார், செயலாளராக எம்.ஏ.எம்.ஹாபிஸ், உபசெயலாளராக ஏ.எம்.பாயிஸ், பொருளாளராக ஏ.முஹம்மது அஸ்கர் தெரிவு செய்யப்பட்டனர். நிர்வாக சபை உறுப்பினர்களாக எம்.எஸ்.ஏ.சுபைர், ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.றியாஸ், எஸ்.எஸ்.இப்றாஹிம், எஸ்.ஜவ்பர், கே.எம்.பாஹிர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாகத் தெரிவின் பின்னர் உரையாற்றிய ஏறாவூர் சமூக சேவை மன்றத்தின் ஸ்தாபகரும் அதன் தற்போதைய தலைவருமான ஏ.ஜுனைட், 'ஏறாவூர் சமூக சேவைகள் மன்றம் இந்த ஆண்டில் அதன் சேவைகளை விரிவுபடுத்தப்படவுள்ளது' எனவும் அவர்  தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .