Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மூன்றாவது விசாரணை அமர்வு எதிர்வரும் சனிக்கிழமையிலிருந்து (22) செவ்வாய்க்கிழமை (25)வரை நடைபெறவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்தது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு இந்த அமர்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 1,081 பேர் விசாரிக்கப்படவுள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 22ஆம் 23ஆம் திகதிகளில் காலை 09 மணியிலிருந்து மாலை 05 மணிவரை சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. இந்த இரு தினங்களிலும் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 639 பேர் சாட்சியம் அளிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில் காணாமல் போனோர் தொடர்பான சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. இந்த இரு தினங்களிலும் கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 442 பேர் சாட்சியம் அளிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சாட்சியம் அளிப்புத் திகதி குறித்த கடிதங்கள் ஆணைக்குழுவினால் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது.
எனினும், இதுவரை தமது உறவுகள் காணாமல் போனமை தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு விண்ணப்பிக்காதோர் விசாரணை நடைபெறும் அனைத்துத் தினங்களிலும் புதிதாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியது.
சாட்சியம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டவர்கள் குறித்த தினங்களில் உரிய இடங்களுக்குச் சென்று சாட்சியங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வழமையான தமது விசாரணையில் நாளொன்றுக்கு 60 பேரின் விசாரணை மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால், இம்முறை நாளொன்றுக்கு 120 பேர் என்ற அடிப்படையில் விசாரிக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியது.
22 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
58 minute ago
1 hours ago