Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
விவசாயிகளது நெல்லை அரசாங்கம் முழுமையாக கொள்வனவு செய்ய முன்வராமையால் ஒரு மூடைக்கு 700 ரூபா நட்டத்தினை விவசாயிகள் எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
வவுணதீவு பிரதேச விவசாயிகள் இம்முறை சிறுபோக விவசாயத்தினூடாக இருபத்தி இரண்டு கோடி ஐம்பத்தொரு இலட்சத்து நாற்பத்தெட்டாயிரம் ரூபா நட்டத்தை எதிர்கொள்வதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் எதிர் காலத்தில் விவசாயத்துறையில் பாரிய வீழ்ச்சி அடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாகM உன்னிச்சை நீர்பாசனத் திட்டத்தின் மூலம் 11400 ஏக்கரும் அதனை அண்டிய ஏனைய நீர்ப்பாசனங்களினுடாக 69 ஏக்கரும் செய்கை பண்ணப்பட்டுள்ளது.
உன்னிச்சை நீர்பாசனத் திட்டத்தின் மூலம் 307,800 மூடை நெல்லும் ஏனைய செய்கை ஊடாக 13,840 மூடை நெல்லும் விளைந்துள்ளது. மூடை ஒன்றுக்கு 700 ரூபா வீதம் நட்டம் ஏற்படுவதன் மூலம் உன்னிச்சை செய்கை விவசாயிகள் 21 கோடி 54 இலட்சத்தி 60 ஆயிரம் ரூபாவினையும் ஏனைய செய்கைகள் ஊடாக 968,800 ரூபா நட்டத்தினையும் எதிர்நோக்குகின்றனர்.
பாரிய நட்டத்தை எதிர்கொள்ளும் விவசாயிகள் இதிலிருந்து பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயத் துறை பின்னடையும் அபாயம் உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago