2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஐ.சி.ஆர்.சி.யின் அபிவிருத்தி திட்டத்துக்கு மட்டக்களப்பிலிருந்து 3 கிராமங்கள் தெரிவு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 25 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

ஐரோப்பிய ஒன்றியத்தின் 90வீதமான நிதியுடனும், ண்ஐர்மன் நாட்டின் 10 வீதமான நிதியுடனும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக மாவட்டத்தில் அபிவிருத்திக்காக மேலும் மூன்று கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

போரதீவுப் பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவில் சின்னவத்தை, பட்டிப்பளைப்பிரதேச செயலாளர் பிரவில் தாந்தாமலை, ஏறாவூர் பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவில் கொடுவாமடு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிவில் பாவக்கொடிச்சேனை ஆகிய பிரதேசங்களே மேற்படி தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இக்கிராமங்களில் சுகாதார விழிப்பணர்வு, மனிதப் பண்புகளை மேம்படுத்தல் மற்றும் கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. திட்டம் பற்றிய விழக்கமழிக்கும் நிகழ்வு நேற்று மாலை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு கிளை காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் திட்ட முகாமையாளர் கென்றியஸ்கூஸ் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க  மாட்டக்கிளைத் தலைவர் த.வசந்தராசா மற்றும் குறித்த பிரிவுகளின் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--