Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
காத்தான்குடி, மண்முனை வடக்கு, ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இவ்வாண்டு பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த சுமார் 400 பேர் நாளை மறுதினம் சனிக்கிழமை ஒரே மேடையில் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக இதன் செயலாளர் சபீல் நளிமி தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தின்போது குறித்த பிரதேசங்களில் 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 167 மாணவர்கள், க.பொ.த சாதாரண தரப் பரிட்சையில் சித்தியடைந்த 20 மாணவர்கள், பல்கலைகழகத்திற்கு தெரிவாகிய 64 மாணவர்கள், விளையாட்டில் சாதனை படைத்த ஒரு மாணவன், கற்பித்தலில் சாதனை படைத்த சுமார் 50 அதிபர்கள், ஆசிரியர்கள், சமுக சேவையாளர்கள் மூவர் இந்நிகழ்வில் பாராட்டி விருது வழங்கி கொளவிக்கப்படவுள்ளனர்.
இவ்விழாவில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago