2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பாபுல் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு ரூ.4,500 அபராதம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பில் பாபுல் உட்பட போதை கலந்த பொருட்களை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவருக்கு 4,500 ரூபா அபராதமாக்க விதிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய் எல்லையில் வைத்து சில தினங்களின் முன்னர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி வீ.இராமகமலன் இந்த அபராத்தை விதிக்க உத்தரவிட்டார்.

மேற்படி நபரிடமிருந்து போதை கலந்த தேன் போத்தல்கள், போதைப் புகையிலை பக்கட்டுகள் உட்பட மேலும் பல பொருட்களை காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .