Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 15 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி )
பாடசாலைகளில் இளம் முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஜந்து பாடசாலைகளை உள்ளடக்கியதான வர்த்தகபீட மாணவர்களின் உற்பத்தி முயற்சி கண்காட்சி மற்றும் இளம் முயற்சியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் இத்திட்டத்திற்குப் பொறுப்பான தலைவர் தேசபந்துபெட்ரின் அமரசிங்க, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.இ.போல், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் உட்பட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு நகரிலுள்ள விவேகானந்தா பாடசாலை, வின்சண்ட், கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி, சிசிலியா பாடசாலை மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் இதில் பங்குபற்றின.
கடந்த வருடம் இத்திட்டத்தில் மூன்று பாடசாலைகள் பங்குபற்றியது. இம்முறை மேலும் இரண்டு பாடசாலைகள் சேர்த்துக்கொள்;ளப்பட்டதாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் போல் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
38 minute ago
2 hours ago