Menaka Mookandi / 2010 நவம்பர் 09 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
	 (ஜிப்ரான்)
(ஜிப்ரான்)
	
	60 வருடங்களாக தொடரும் தமிழ் மக்களின் போராட்டத்தின் இறுதி இலக்கு எந்தவித அதிகாரங்களுமில்லாத மாகாண சபையல்ல. வடகிழக்கு இணைந்த மாகாணத்திற்குள் நிரந்தர தீர்வு என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.  
	
	வடகிழக்கு இணைந்தால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரே முதலமைச்சராக வருவார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அரியநேத்திரன் எம்.பி.யினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 
	
	இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவதுஇ 'இணைந்த மாகாணத்திற்குள் யார் வேண்டுமானாலும் அதிகாரத்திற்கு வரலாம். அது முஸ்லிமாக இருந்தாலும் சரி, தமிழ் பேசும் சமுகத்ததைச் சேர்ந்தவராக இருந்நதால் சரி. எந்தத்தீர்வாக இருந்நாலும் இணைந்த வடகிழக்கிற்குள் இருக்கவேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நி;லைப்பாடாகும். 
	
	முதலமைச்சரின் கருதின்படி மாகாண சபைதான் இறுதித்தீர்வாக கொள்ளப்படுகின்றது. மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டதே வடகிழக்கு மக்களுக்காகத்தான். ஆனால் இன்று ஏனைய மாகாண சபைகளும் உருவாக்கப்பட்டு எந்தவித அதிகாரங்களுமின்றி வெறும் பொம்மைகளாக  காணப்படுகின்றன. எனவே மாகாண சபை தமிழ்பேசும் மக்களின் இறுதித் தீர்வல்ல.
	
	இணைந்த வடகிழக்கிற்குள் காணப்படும் அதிகாரத்துடனான தீர்வே இறுதித்தீர்வாகும். இந்நிலையில் எந்தவித பிரதேச பாகுபாடுகளும் எமக்கு கிடையாது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
jeyarajah Wednesday, 10 November 2010 06:21 PM
தனி ஈழம் சரியென்றால்,தனி மட்டக்களப்பும் சரி.தனது தலைமைக்காக தனி நாடு கோருகின்றார் பிள்ளையான். இந்த அறிவுக் களஞ்சியங்களுக்கு தலைமை கொடுத்தது யார்? நீங்கள் தானே.போராட்டத்தின் போர்வையில் துவக்கு தூக்கியவன் எல்லாம் தலைமையாகி மகிந்தவுக்கு தலைமை தாங்குவது சுலபமாகிவிட்டது.தமிழ் மக்களே இனியாவது கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.படித்தவர்களை தலைமையாய் தேர்ந்தெடுங்கள். 
     
Reply : 0 0
xlntgson Thursday, 11 November 2010 09:11 PM
அதிகாரப்  பரவல், பால் கேட்கும் பிள்ளைக்கு சூப்பி என்று  பஸ் சங்க தலைவர் கெமுனுவும்
பொருளாதார நிலைமை சீர்கெட்ட நிலையில் அதிகார பரவலோ தீர்வோ பயனளிக்காது என்று சுவாமிநாதன் பா. உ.வும் கூறி இருக்கின்றனர்.
இப்போது, அமையப் போகும் மாகாண சபை எவ்வாறானதாக இருக்கும் என்று வடக்கும் கிழக்கும் போட்டி! 
அது இணையாத ஒன்றாக இருக்கும் என்றே தெரிகிறது.
கிழக்கின் தலைமை தமிழர் முஸ்லிம் சிங்களவர் என்று மாற்றிக்கொண்டே இருக்கப்படுமா?
இதெல்லாம் சாத்தியமான ஒன்றா, குடியிருப்புகளையே அக்ரஹாரம் ghetto என்று பழிக்கும் நிலையில்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago