2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 70 பேர் கைது

Super User   / 2013 ஜூலை 31 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -எம்.எஸ்.எம்.நூர்தீன்
, சிங்காரவேலு சசிக்குமார்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 70 பேரை கடற் படையினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
இவர்கள் வாழைச்சேனை கடற் பரப்பில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த போது இவர்களை கடற்படையினர் கைது செய்து திருகோணமலைக்கு கொண்டு செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு நகரில் மூன்று வேன் மற்றும் ஒரு கார் ஆகியவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இவை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--