2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனை செய்த 87பேர் கைது

Menaka Mookandi   / 2010 நவம்பர் 12 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 87பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக திணைக்களத்தின் மாவட்ட அலுவலக பொறுப்பதிகாரி எஸ்.தேவராஜன் தெரிவித்தார்.

இதன்போது சட்டவிரோதமானமுறையில் சாராயம் விற்பனைசெய்த 31பேரும், கள்ளு விற்பனையில் ஈடுபட்ட 54பேரும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவருமாக 87 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதுடன், சிலர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X