2019 ஒக்டோபர் 19, சனிக்கிழமை

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு இன்று (17) முதல் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 14 மாதங்களாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய தலைமைப் பொலிஸ் பரிசோதகரும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுமான நலின் ஜயசுந்தர தற்போது, கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ரத்னாயக்க என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றங்களை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .