2026 ஜனவரி 30, வெள்ளிக்கிழமை

’திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்’

வா.கிருஸ்ணா   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தயாராகி இருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்கத்திலுள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில், தேசிய இனப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், கைதிகள் விவகாரம், வடக்கு - கிழக்கு அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்ற பல விடயங்கள் தொடர்பாக, முக்கிய மூன்று வேட்பாளர்களுடன் உரையாடவேண்டும் என்றும் இதன்பின்னரே, எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும் என்றும் கூறினார்.

தற்போது அரசியலில் கோமாளி வித்தைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றும்  இந்தியாவில் சில அரசியல் கோமாளிகள் இருப்பது போன்று இலங்கையிலும் அரசியல் கோமாளித்தனம் இப்போது அரங்கேற்றப்பட்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

எனவே, தமிழ் மக்கள், ஏமாளிகளாக இருக்கமாட்டார்கள் என்றும் ஏமாற்றுவபர்களுக்கு, தமிழ் மக்கள் மத்தியில் ஒருபோதும் இடமில்லை என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X