Princiya Dixci / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
விளக்கமயிலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல், டிசெம்பர் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (07) நடைபெற்றது. இதன்போது, பிரசாந்தன், சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றுக்கு அழைத்துவராமல், நீதிபதி ஏ.சி.றிஸ்வான் Zoom தொழில்நுட்பம் ஊடாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கடந்த நவம்பர் 09ஆம் திகதி காலை கொழும்பில் இருந்து வருகை தந்த சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய, கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
55 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
3 hours ago