Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஜனவரி 20 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் காணி பதிவகத்தின் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
காணிப் பதிவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், இன்று (20) கடமைக்காக வருகின்ற வேளை, வீதி விபத்தில் சிக்கி களுவாஞ்சிக்குடி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அங்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட காணிப் பதிவகத்தில் பணியாற்றுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தங்களின் வீடுகளில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் நோய் தெற்று அறிகுறிகள் ஏற்படுகின்ற போது, சுகாதாரதுறையினரை தொடர்புகொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தொரிவித்தார். ..
காணிப் பதிவகத்தின் சேவைகளை பெறுவதற்கு வருகின்ற பொதுமக்கள், மறு அறிவித்தல் வரும் வரை இச்சேவைகளை பெறமுடியாது எனவும் எதிர்வரும் நாட்களில் அவ் அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்டச் செயலாளர் மேலும் தொரிவித்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள அலுவலக பிரிவு அனைத்துக்கும் சுகாதாரப் பிரிவினரால் தொற்று நீக்கல் திரவகம் விசிறும் பணியும் இன்று (20) முன்னெடுக்கப்பட்டது.
(க.விஜயரெத்தினம், பேரின்பராஜா சபேஷ், வ.சக்தி, ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்,கனகராசா சரவணன்)
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago