2026 ஜனவரி 30, வெள்ளிக்கிழமை

மணல் அகழ்வதுற்கு அனுமதி வழங்கக் கூடாதென போராட்டம்

பேரின்பராஜா சபேஷ்   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மயிலவெட்டுவானில் ஆற்று மணல் அகழ்வதுற்கு அனுமதி வழங்கக் கூடாதெனக் கோரி, இன்று (15) கவனயீரப்புப் போராட்டம் நடைபெற்றது.

மயிலவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மயிலவெட்டுவான், உப்போடை வீதியில் நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில், பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

மயிலவெட்டுவான் வீரக்கட்டு பகுதியில் ஆற்று மணல் அகழ்வதற்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் 10 பேர் உட்பட 25 பேருக்கு விசேட அனுமதி நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கியுள்ளமையைக் கண்டித்து, இந்தக் கவனயீர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X