2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’முஸ்லிம்கள் பொறுமையை இழந்தால் ’இந்த நாடு விளைவைச் சந்திக்க நேரிடும்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 மே 23 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள்;; பொறுமையை இழந்தால், இந்த நாடு மிகப் பயங்கரமான  விளைவைச் சந்திக்க நேரிடும்; எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த நாட்டில் இடம்பெற்றுவரும் இனவாதச் செயற்பாடுகள் மீண்டும் இரத்தக்களரியை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.

இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் இனவாதத்தை, வன்முறைகளை விரும்பவில்லை என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டமை மிகப் பெரிய சான்றாகும்.

இந்த நாட்டிலுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும்  தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி  வருகின்றனர். அதற்கு இந்த நாட்டிலுள்ள அரசியல் காரணமும் அதேபோன்று, சர்வதேசத்தின் ஆதிக்கமும் ஆகும்.

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜுலைக் கலவரமும் அதை அடுத்து, இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தமும் அவற்றினால் ஏற்பட்ட வடுக்களும் அழிவுகளும் இன்னும் மறையாத நிலையில் மீண்டும் இந்த நாட்டில் இனவாதம் தலை தூக்கியுள்ளது.

எனவே, இந்த நல்லாட்சி அரசாங்கத்தை  நம்பியிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், இனவாதிகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் முனைய வேண்டும். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட அரசாங்கம் முன்வர வேண்டும்' என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .