2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

மட்டு. மாவட்டத்தின் 30 இடங்களில் 15 ஆம் திகதி ஐந்து மணி நேர மின் வெட்டு

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 இடங்களில் எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை ஐந்து மணி நேர மின் வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்ப மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, மரப்பாலம், கரடியனாறு, இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பாலஞ்சோலை, ஐயங்கேணி, மிச்சி நகர், தளவாய், மீராகேணி, சதாம் ஹுசைன் கிராமம், ஹிஸ்புல்லா கிராமம், கொம்மாதுறை, செங்கலடி, களுவங்கேணி, ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை மற்றும் ஊறணி ஆகிய பிரதேசங்களிலேயே மின் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .