2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

டெங்கு நுளம்புகள் பரவும் சூழலை வைத்திருந்த 47 பேர் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி முதலாம் குறிச்சி,  புதிய காத்தான்குடி ஆகிய இரு  பிரதேசங்களிலும்; டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் வீடுகள் மற்றும் வீட்டுச் சுற்றுப்புறச்; சூழலை வைத்திருந்ததாகக் கூறப்படும் 47 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இந்நிலையில்,  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி  முதல் 8ஆம் திகதிவரை நுளம்பு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.  இதனையொட்டி காத்தான்குடி முதலாம் குறிச்சி மற்றும் புதிய காத்தான்குடி  பிரதேசங்களிலுள்ள வீடுகளில் திங்கட்கிழமை (07), செவ்வாய்க்கிழமை (08) ஆகிய இரு தினங்களிலும் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

காத்தான்குடி நகரசபையானது காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், காத்தான்குடி பிரதேச செயலகம், பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின்; உதவியுடன் இப்பரிசோதனையை மேற்கொண்டது.

பொதுச் சுகாதர பரிசோதகர்கள், பொலிஸார், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இப்பரிசோதனையில் ஈடுபட்டனர்.

இது இவ்வாறிருக்க, காத்தான்குடி நகரசபை பிரிவில் ஜனவரி மாதத்திலிருந்து  ஏப்ரல் மாதம் 08ஆம் திகதிவரை  25 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் சிறுமியொருவர்  டெங்கு நோயால்  உயிரிழந்ததாகவும் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .