Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டு வந்த சீன நாட்டு பொறியியலாளர்கள் இருவர் கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தமைக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நேற்று முந்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு ஊறனியிலுள்ள சைனா ஓவசீஸ் ஹோர்ல்டிங் நிறுவனத்தின் வேலைத்தள அலுவலகத்திற்கு சென்று அங்கு செயற்திட்ட பொறியியலாளர் ஷுவை சந்தித்து தனது அனுதாபத்தை வெளியிட்டார்.
பலியான சீன நாட்டு பொறியியலாளர்களின் குடும்பத்தினருக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் சார்பில் அனுதாபங்களை தெரிவிக்குமாறு இதன்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், செயற்திட்ட பொறியியலாளரிடம் தெரிவித்ததாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஊடக இணைப்பாளர் ஜலீஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் அந்நிறுவனத்தின் முகாமையாளர் லுவோ ஜியஸ், மற்றும் பிரதி செயற்திட்ட முகாமையாளர் ஷு சியாவோ ஜிங் ஆகிய இரண்டு பொறியியலாளர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .