A.P.Mathan / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
பசுமை மாதத்தினை முன்னிட்டு சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பான கிரீன்கோ தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில், உள்நாட்டு சிவில் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் மரநடுகை நிகழ்வுகளும் பாடசாலை மாணவர்களுக்கு சுற்றாடல் தொடர்பான விழிப்பு கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் இயக்குநர் எம்.ஏ.எம்.மிப்ஸி, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
பசுமை மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு வலய பாடசாலைகளுக்கிடையே சுற்றாடல் தொடர்பான கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த இயக்குநர், போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கும் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
இதன் முதற்கட்டமாக காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நவம்பர் மாதம் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலும் இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு சுற்றாடல் அதிகாரசபை, வனபரிபாலன திணைக்களம், தென்னை அபிவிருத்திசபை ஆகியவற்றின் மாவட்ட கிளை காரியாலயங்கள் அனுசரணை வழங்குகின்றன.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025