2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ஏறாவூர்பற்றில் பல்தேவை கட்டிடம் திறப்பு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி தளவாயில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவைக் கட்டிடத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

நெக்டெப்பின் நிதி உதவித்திட்டத்தில் அமைக்கப்பட்ட மேற்படி கட்டிடம் மக்களின் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டது.
பன்குடாவெளி கிராம உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், ஏறாவூர்பற்று பிரதேசசபைத் தவிசாளர் எஸ்.ஜீவரங்கன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

பன்குடாவெளி பதுளை வீதியில் உள்ள வயல்களை அதிகமாகக் கொண்ட பிரதேசமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X