2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் இம்முறை சோளம் அமோக விளைச்சல்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால  இடைவெளிக்குப் பின்னர்,  சோளம் செய்கை அதிகளவில் விளைச்சலாகியுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.


யுத்த சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சோளம் செய்கை சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய கொக்கொட்டிச்சோலை, வெல்லாவெளி, வவுணதீவு போன்ற பகுதிகளிலேயே அதிகமாக சோளம் செய்கை பண்ணப்பட்டதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருஷாங்கன் தெரிவித்தார்.
அறுவடை செய்யப்பட்ட சோளம் மாவட்டத்தின் பல இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் சோளம் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--