2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மாணவிகள் இருவர் மீது துஷ்பிரயோகம் : இளைஞனுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் தரம் நான்கில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை வல்லுறவுக்குட்படுத்திய அதே நேரம், மற்றொரு மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸாரினால் கடந்த செவ்வாய்க்கிழமை (1) கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனை புதன்கிழமை (2) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் ஆஜர் படுத்திய போதே இவ்வுத்தரவு பிரப்பிக்கப்பட்டது என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவ்இளைஞன் புத்தி சுவாதீனமற்ற நிலையில் உள்ளவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது  தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .