2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மண்முனைப்பற்று பிரதேசசபை முதலாமிடம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வடக்கு கிழக்கு மாகாண புறநெகும நகர அபிவிருத்தி திட்டத்தினை சிறப்பாக மேற் கொண்டமைக்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேசசபை முதலாவது இடத்தினை பெற்றுள்ளது.

இதனையொட்டி மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசத்துக்கு பிரதேச சபை ஊழியர்களினால் திங்கட்கிழமை(7) வரவேற்பளிக்கப்பட்டது.

வரவேற்பு வைபவத்தில் சனசமூன அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுரேஸ் ரொபட், மற்றும் உள்ளூராட்சி உத்தியோகத்தர் எஸ்.இளங்கோ, தொழில்நுட்ப உத்தியோகத்தர் ரி.தயாச்சந்திரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜே.பகீதரன் பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கு மாகாண புறநெகும நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்படி பிரதேச சபை பிரிவில் வீதிகள் மற்றும் கட்டிடங்கள், சந்தை கட்டிடத்தொகுதி உட்பட பல்வேறு அபிவிருத்தி வேலைததிட்டங்களை மிகவும் சிறப்பாக மேற் கொண்டமைக்காக மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச சபை முதலாவது இடத்தினை பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--