Super User / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
	 (கே.எஸ்.வதனகுமார்)
(கே.எஸ்.வதனகுமார்)
	
	களுவாஞ்சிக்குடியில் இயங்கிய நீதவான் நீதிமன்றத்தை 26 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கச்செய்ய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
	
	மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை வியாழக்கிழமை நீதியமைச்சில் சந்தித்தார்.
	
	அச்சந்திப்பில் களுவாஞ்சிக்குடியில் கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் இயங்கிய நீதிவான் நீதிமன்றத்தை மீண்டும் இயங்கச் செய்வது தொடர்பாக அவரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
	இந்த நீதிமன்றத்தை மீண்டும் இயங்கச்செய்யும் வகையில் முதற்கட்டமாக வாரமொருமுறை இயங்கும் வகையில் சுற்றுலா நீதிமன்றத்தை ஸ்தாபிக்க நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
	
	முதற்கட்டமாக தனியார் கட்டிடம் ஒன்றில் சுற்றுலா நீதிமன்றத்தை ஆரம்பிப்பதற்கும், அடுத்த வருட நடுப்பகுதியல் நிரந்தர நீதிமன்றத்தை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக  நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.
	
	களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த நிலையில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக நீதிமன்றத்தின் செயற்பாடு 1984 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டது.
	
	இந்த நீதிமன்றக் கட்டிடத்தில் தற்போது விசேட அதிரடிப்படை முகாம் அமைந்துள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் இயங்காததினால் கடந்த 26 வருடங்களாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவு வெல்லாவெளி பொலிஸ் பிரிவு மக்கள் வழக்கு விசாரணைகளுக்காக மிக நீண்ட தொலைவில் உள்ள மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கே செல்லவேண்டியிருந்து.
14 minute ago
18 minute ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
6 hours ago
6 hours ago