Super User / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: தர்மலிங்கம் சந்திரசேகரர்
செட்டியார்மடம், அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சந்திரசேகரர் 28.09.2010 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் - பொன்னம்மா தம்பதியரின் இளைய மகனும் தவமணி தேவியின் அன்புக் கணவரும், கிருஸ்ணவேணி (ப.நோ. கூ. சங்கம், சங்கானை), கரன் (கனடா), றஜினி, கீரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் கோபால கிருஸ்ணனின் (ப.நோ.கூ. சங்கம், சங்கானை) மாமனாரும், நடராசா, மகேந்திரன் காலஞ்சென்ற தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதியினரின் மருமகனும் ஜெயறஞ்சிதம் (பிரான்ஸ்), ராஜேந்திரன் (சவுதிஅரேபியா), வசந்தகுமாரி ஆகியோரின் மைத்துனரும், மாதங்கி, பிரியங்கி, விஷ்ணுபிரியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.09.2010) புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு அவரின் இல் லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக அராலி வடக்கு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
அராலி வடக்கு,
செட்டியார் மடம்,
வட்டுக்கோட்டை.
7 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
02 Jan 2026