2025 ஜூலை 02, புதன்கிழமை

அக்கரபத்தனை பிரதேச சபைக்கான புதிய காரியாலயம் திறப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்‌ஷான், எஸ்.சதீஸ்
 

அக்கரபத்தனை பிரதேச சபையின் புதிய காரியாலயம், இன்று (02) காலை, ஹோல்புரூக் நகரில், உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அக்கரப்பத்தனை பிரதேச சபைத் தவிசாளர் எஸ். கதிர்செல்வனின் அழைப்பின் பேரில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானால், இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி. சக்திவேல், எஸ். பிலிப்குமார், மத்திய மாகாண தமிழ் கல்வி முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை,  நுவரெலியா ஆகிய பிரதேச சபைகளின் தலலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .