Kogilavani / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
அனர்த்தங்களின் போது மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில், உள்ளூராட்சி சபை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இன்று(20) நடைபெற்றது.
'காலநிலை மாற்றங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான உப விதிகள்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயமலர்வில் அனர்த்த பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு விடயங்கள் எடுத்து கூறப்பட்டன.
இலங்கை உள்ளூராட்சி நிறுவனங்களின் சம்மேளனம், டிக்கோயா நகர சபை மற்றும் அம்பகமுவ பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பபாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர் எஸ்.பிரியதர்ஷினி, அம்பகமுவ பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சரவணன், இலங்கை உள்ளூராட்சி நிறுவனங்களின் சம்மேளனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹேமன்தி குணசேகர மற்றும் பொலிஸ் நிலைய அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago