2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

‘அப்பாவைக் கண்டால் அறிவிக்கவும்’

Kogilavani   / 2017 ஜூன் 13 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மத்துகம, நிலுவ பகுதியில் பணிபுரிந்து வந்த மஸ்கெலியா, காட்டு மஸ்கெலியா கோர்த்தி பிரிவைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் (வயது 70) என்பவரை, கடந்த சில நாட்களாகக் காணவில்லை என்று, அவரது மகன் நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.  

களுத்துறை, மத்துகமவிலுள்ள சிறுதோட்ட பயிர்ச் செய்கையாளர் ஒருவரிடம் பணிபுரிந்து வந்த நிலையிலேயே, மேற்படி வயோதிபர் காணாமல் போயுள்ளதாக, முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

கடந்த மாதம் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக, காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில், மத்துகமவில் பணிபுரிந்து வந்த மேற்படி நபரை அழைத்து வருவதற்காக அவரது மகனான சசி என்பவர், வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனத்தின் மூலம் மத்துகமவுக்குச் சென்றுள்ளார்.  

மத்துகமவும் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததால், தனது தந்தை முகாமில் இருக்கக்கூடும் என நினைத்து, அந்நபர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். எனினும், இதுவரை தந்தையிடமிருந்து எவ்வித தொடர்புகளும் இல்லை என்று, மகன் தெரிவித்துள்ளார்.  

மேற்படி நபர் இறுதியாக, இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலுள்ள இலங்கை வங்கிக் கிளையில் இருந்து, கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியன்று, தனது மகனுக்கு 5,000 ரூபாய் பணத்தை  அனுப்பியுள்ளதாக, முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எனவே, இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், மஸ்கெலிய பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 052-2277222 என்ற இலக்கத்துக்கு, அறியத்தறுமாறு பொலிஸார் கோரியுள்ளனர். அல்லது, 078-8963108, 077-8171078, 077-2754012 என்ற அலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு உறவினர்கள் கோரியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .