2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தித் திட்டங்கள் இன்று அங்குரார்ப்பணம்

எம். செல்வராஜா   / 2017 ஜூலை 20 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்ட நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு இணங்க, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வழிநடத்துதலில், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சால், பதுளை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுகளில், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வதுடன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரீன் பெர்ணான்டோ மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, ஹப்புத்தளை சுற்றுலாத்துறை மத்திய நிலையம், பதுளை தயாகுணசேகர மாவத்தையின் குறுக்குவீதி அபிவிருத்தித் திட்டம், பதுளை சேனநாயக்க பூங்கா அபிவிருத்தி வேலைத்திட்டம், பதுளை தபால் நிலைய வீதி வர்த்தகத் தொகுதி நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தல், பதுளை வாரச் சந்தை திறப்பு, எல்லை புகையிரத சதுக்கம் அபிவிருத்திப்பணி வேலைத்திட்டம் ஆகிய அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .