2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

இரவு சோறு சாப்பிட்ட மூவருக்கு இரத்தவாந்தி

எம். செல்வராஜா   / 2017 ஜூன் 07 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுடைய வீட்டில், இரவு சமைத்த உணவை உட்கொண்ட தாயும் இரு பிள்ளைகளும், இரத்த வாந்தி எடுத்த நிலையில், கதிர்காமம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கதிர்காமத்தை அண்மித்த கிராமமொன்றைச் சேர்ந்த மூவரே, கதிர்காமம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கதிர்காமத்தை அண்மித்த கிராமக் கடையொன்றில் வாங்கிய அரிசியிலேயே, கடந்த 5ஆம் திகதி இரவு சோறு சமைக்கப்பட்டுள்ளது. அதனை உட்கொண்டதன் பின்னரே அந்த மூவரும், இரத்த வாந்தி எடுத்துள்ளனர்.  

அவர்கள் சாப்பிட்ட உணவு மற்றும் எடுத்த வாந்தி ஆகியனவற்றை சோதனைக்கு உட்படுத்திய போது, உடைந்த போத்தல் தூள்கள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.  

இதையடுத்து, வீட்டிலிருந்த அரிசியைச் சோதனைக்கு உட்படுத்திய போது, அதிலும், உடைந்த போத்தல் தூள்கள் இருந்தமை கண்டறியப்பட்டது. அத்துடன், அவ்வீட்டில் சமைத்த உணவிலும் அதே போத்தல் தூள்கள் காணப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X