2021 மார்ச் 04, வியாழக்கிழமை

இளம் தம்பதியினருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.எம். ரிஃபாத், மொஹமட் ஆஸிக்

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகூடிய சம்பளத்துக்கு வேலை பெற்றுத்தருவதாக கூறி, இளைஞர் - யுவதிகளிடமிருந்து 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியிருந்த இளம் தம்பதியினரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவுல நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று (26) உத்தரவிட்டுள்ளார்.

வில்கமுவ - மொத்தளை பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளிடம் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள நிறுவனங்களில் அதிகூடிய சம்பளத்துக்கு வேலைவாய்ப்பு  பெற்றுத்தருவதாக கூறி, 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை பெற்றுக்கொண்டு மேற்படி இளம் தம்பதியினர் தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். நிதி மோசடி சம்பவம் தொடர்பில் குறித்த இளம் தம்பதியினருக்கு எதிராக 22 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என
பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பையடுத்து, வில்கமுவ பொலிஸார் அவர்களை செவ்வாய்க்கிழமை (25) கைதுசெய்திருந்தனர். மேற்படி இருவரையும் நேற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .