2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

எல்ல- வெல்லவாய வீதிக்கு சிவப்பு எச்சரிக்கை

Editorial   / 2019 நவம்பர் 25 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

எல்ல- வெல்லவாய வீதியில், மண்சரிவு, கற்பாறை சரிவு அபாயம் தொடர்வதால், சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வீதியின் இராவணாஎல்லயை அண்மித்த 24,25 கிலோமீற்றர் மைல் கல் பகுதிகளுக்கு அருகில், 700 அடி உயரத்திலிருந்து கற்பாறைகள் சரிந்து வரும் அபாயம் உள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படிப் பகுதியிலிருந்து அதிகளவான கற்பாறைகளை கடந்தவாரம் அகற்றியதாகவும் எனினும் அப்பகுதியில் மேலதிகமாக உள்ள கற்கள் சரிந்துவரும் நிலையிலேயே உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகன சாரதிகளின் அசௌகரியங்களைக் குறைப்பதற்காக, இப்பாதையானது போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .