2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கங்கையில் நீராடியவர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா  

கதிர்காமம், மாணிக்க கங்கையில் சனிக்கிழமை(14), நீராடிக் கொண்டிருந்த நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நபர், ஞாயிற்றுக்கிழமை(15) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்புத்தளையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் இளையதம்பி (வயது 26) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கதிர்காமம் பொலிஸாரும், பிரதேச இளைஞர்களும் மேற்கொண்ட தேடுதலின் பயனாக,  மாணிக்க கங்கையின்  அமுன  என்ற இடத்திலிருந்து இவரது சடலம், உருக்குழைந்த நிலையில் மீட்கப்பட்டது.

இதுதொடர்பில் கதிர்காமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .