Editorial / 2020 மார்ச் 15 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் டிக்கோயா-வனராஜா தோட்டப் பகுதியில், நேற்று (14) மாலை ஏற்பட்ட காட்டுத்தீயால், இரண்டு ஏக்கர் மானா புல் காடு எரிந்து நாசமாகியதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்,
திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பில் பொதுமக்கள் வழங்கியத் தகவலுக்கமைய ஹட்டன் பொலிஸாரும் ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துள்ளனர்,
தொடர்ந்து, இவ்வாறு காடுகளுக்கு தீ வைக்கும் விசம செயல் இடம்பெற்ற வண்ணம் உள்ளமையால், பாரிய அளவிலான வனப்பகுதிகள் அழிவுற்றுள்ளதுடன் கடும் வரட்சி காலநிலையால் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அத்துடன், தேயிலை தொழிற்றுறையும் பாதிப்படைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
19 minute ago
24 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
4 hours ago