2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

காட்டுத் தீயால் 100 ஏக்கர் நாசம்

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

மாத்தளை எல்கடுவ, ஹூன்னஸ்கிரிய தோட்டத்தில், நேற்று முன்தினம் (15) மாலை ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்புத் தீக்கிரையாகியுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படிக் காட்டுத் தீயானது, ஹூன்னஸ்கிரிய, தாலிங்காமட ஆகியப் பகுதிகளிலும் மிக வேகமாகப் பரவியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

பிரதேச மக்கள், பொலிஸார் மற்றும் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேற்படிப் பகுதியில் வரட்சியான வானிலை நீடித்து வருவதால், தீ வேகமாகப் பரவியதாகத் தெரிவிக்கும் பொலிஸார், எரிபொருட்களுடன் காட்டுக்கு செல்வதையும் காட்டுக்கு அருகிலுள்ள நிலப்பரப்பில், குப்பைகளுக்குத் தீ மூட்டுவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .