2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

கத்திக்குத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2017 ஜூலை 13 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

மஹியங்கனை, தமன சந்தி வெலபல்லேவெலவில், ஒரு பிள்ளையின் தந்தையொருவர், கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக, மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மேற்படி பகுதியைச் சேர்ந்த டீ.எச்.லக்ஷ்மன் விஜேசேகர (வயது 34) என்பவரே, உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர், தனது வீட்டுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தபோது, திடீரென வந்த இனந்தெரியாத நபரொருவர், மேற்படி நபரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த நபரை, வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சடலம் பிரேத பரிசோதனைக்காக, வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .