2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

காசோலை வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2016 ஜூலை 16 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

அம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள வருமானம் குறைந்தோருக்கான வீடு புனர்நிர்மாணம் செய்வதற்கான பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு காசோலை வழங்கும் நிகழ்வு, இன்று சனிக்கிழமை அம்பகமுவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

வீடமைப்பு அமைச்சின் செமட்ட செவன வேலைதிட்டத்தின் கீழ், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலில், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இவ் வேலைதிட்டத்தினூடாக, அம்பகமுவ பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த 150 குடும்பங்களுக்கு  மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் இக் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது, தமது வீடுகளை திறுத்தியமைக்கும் வகையில், சீமெந்து பக்கெட்டுகளை பெற்றுகொள்வதற்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .