2021 ஜனவரி 27, புதன்கிழமை

கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அபிவிருத்திகள் தொடரும்

Kogilavani   / 2016 ஜூலை 11 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் தொடர்ந்தும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

'மலையகத்தில் சிறந்த அசிரியர் சமூகத்தை உருவாக்கும் கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நிலவி வந்த இடநெருக்கடியை கருத்திற்கொண்டு, அக் கலாசாலைக்கு புதிய கட்டடமொன்றை அமைத்துகொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டேன்' எனவும் அவர் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணின் பன்முகப்படுத்தப்பட்ட 66 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் புதிய கட்டடமொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  இங்கு மேலும் கூறிய அவர்,

'அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பணவை, ஆசிரிய உதவியாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை பத்திரம் நாடாமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே,  ஆசிரிய பயிற்சி நெறியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்' என அவர் இதன்போது கோரினார்.

'காலாசாலையில் ஏற்பட்ட இட நெருக்கடியை தீர்க்கும் வகையில் இன்று புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினேன். தொடர்ந்தும் கலாசாலைக்கான அபிவிருத்திகள் தொடரும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .