Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 20 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
எம்பிலிப்பிட்டியவிலுள்ள பொது குடிநீர்த் தொட்டிக்கு அருகிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அடையாளங்காண உதவுமாறு, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேற்படி நீர்த்தொட்டிக்கு அருகிலிருந்து, நேற்று முன்தினம் (18) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, மேற்படி இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய அரச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என்றும் சடலத்தை அடையாளங்காண உதவுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025