2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

சட்டவிரோத குற்றங்களை தடுக்க விசேட திட்டம்

Sudharshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி மாவட்டத்தில் நிலவும் குற்றங்களையும் சட்டவிரோத மதுபானத் தயாரிப்புகளையும் தடுப்பதற்கு, எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், விசேட திட்டமொன்று   அமுல்படுத்தப்படவுள்ளதாக கண்டி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி எல்லேபொல தெரிவித்தார்.

புத்தாண்டுக் காலத்தில் நகரங்களுக்கு மக்கள் அதிகமாக வருவதாகவும் அவர்களிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் குழுக்கள் அதிகளவில் செயற்படும் என்பதாலும் இத்தகையவர்களிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பொலிஸாரினால்; விசேட பாதுகாப்புத் திட்டம்   அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புத்தாண்டுக் காலத்தில் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத மதுபாவனைகள் அதிகரிப்பதாக தெரிவித்த அவர், அவற்றைத் தடுப்பதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .