Kogilavani / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
பொகவந்தலாவை, மோரா தோட்டத்திலிருந்து, சிங்காரவத்தை தோட்டத்துக்குச் செல்லும் சுமார் 6 கிலோமீற்றர் தூரம் வரையிலான வீதி, முறையாகப் புனரமைக்கப்படாதிருப்பதால், பிரதேச மக்களும் வாகன சாரதிகளும், பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில் இவ்வீதி புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. எனினும், இவ்வீதி முறையாக புனரமைக்கப்படாது, குண்டும் குழியுமாக காணப்படுவதால், இவ்வீதியால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கன்றனர்.
எனவே, இவ்வீதியை அபிவிருத்தி செய்ய சம்பந்தப்பட்டோர் முன்வர வேண்டுமென, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago