Kogilavani / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின்றி, கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு வந்த மூன்று சிறுவர்களையும், தமது பாதுக்காப்பில் வைத்துள்ள ஹட்டன் பொலிஸார், அவர்களை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
இச்சிறுவர்கள் தொடர்பில் அறிந்துகொண்ட சித்தி உறவுமுறையுடைய பெண், பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சிறுவர்களை பொறுப்பேற்க முற்பட்டபோதும், பொலிஸார் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவை செல்வகந்த தோட்டத்தைச் சேர்ந்த சிவபிரகாசம் பிரவீன் (வயது 13), அஸ்வினி (வயது 10), சரணி (வயது8) ஆகிய சிறுவர்கள், தன்னந்தனியாக கொழும்பு, கடவத்தையிலிருந்து, ஹட்டனுக்கு பஸ்ஸில் வந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (25) காலை 11.30 மணியளவில் ஹட்டன் பஸ்தரிப்பிடத்தில் வந்து இறங்கிய இவர்கள், மாலை 3.30 வரை, பஸ் தரிப்பிடத்திலேயே நின்றுகொண்டிருந்துள்ளனர். இவர்களை அவதானித்த, சிவில் பாதுகாப்பு பொலிஸார், அவர்களை ஹட்டன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தமக்கு பெற்றோர் இருப்பதாகவும், தந்தை கடவத்தையில் வைத்து பஸ்ஸில் ஏற்றிவிட்டதாகவும் சிறுவர்கள் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளனர். சிறுவர்களின் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், நேற்று மதியம்வரை சிறுவர்களின் தந்தை வரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago