2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சிவனொளிபாத மலைக்கான பருவகாலம் நாளை ஆரம்பம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை பருவ காலம், நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார். 

இதனை முன்னிட்டு, இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய பெரஹரா பவனி, இன்று திங்கட்கிழமை புறப்பட்டு, பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாத மலையின் அடிவாரத்தை அடையவுள்ளதாக அவர் கூறினார். 

இம்முறையும் 3 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணிக்கவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். 

அந்தவகையில், ஓர் ஊர்வலமானது, இரத்தினபுரி - அவிசாவளை வீதி வழியாகப் பயணித்து, ஹட்டன் - நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலையை அடையவுள்ளது. மற்றைய ஊர்வலமானது, இரத்தினபுரி - பலாபத்தல வீதியினூடாகப் பயணிக்கவுள்ளது. தெய்வீக ஆபரணங்களை ஏந்திய மூன்றாவது ஊர்வலம், பெல்மடுல்ல -

ஓப்பநாயக்க, பலாங்கொடை, பின்னவல, பொகவந்தலாவை ஊடாக, சிவனொளிபாதமலையை அடையவுள்ளது. 

அத்துடன், சமன்தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின்னர், 13ஆம் திகதி அதிகாலை நடைபெறவுள்ள விசேட பூஜைகளைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலம் ஆரம்பமாகும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--