2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

டெங்கு பரவ கூடிய வகையில் வாழ்விடங்களை வைத்திருந்த 53 பேருக்கு எதிராக நடவடிக்கை

Sudharshini   / 2016 மார்ச் 31 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி, எஸ்.சுஜிதா

அரசாங்கத்தினால், பிரகடனப்படுத்தப்பட்டுள்ள டெங்கொழிப்பு வாரத்தையொட்டி மத்திய மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது,  நுளம்பு பெருகும் வகையில் வாழ்விடங்களை வைத்திருந்த சுமார் 53 பேருக்கு எதிராக  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மாத்தளைக்கு உட்பட்ட பகுதியில் மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இம்மாவட்டத்தில் பாடசாலை, வீடுகள், கடைகள், பொதுச்சந்தை உள்ளிட்ட 400 இற்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை(30) முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே மேற்படி 45 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாநகர சபையின் ஆணையாளர் லலித் ஹெடன்பாவெலவின் பணிப்புரைக்கு அமைய மாநகர சுகாதார பிரிவினர்,
பொலிஸார், படைவீரர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இச்சோதனையை மேற்கொண்டனர்.

இதேவேளை, தலவாக்கலை வட்டகொடைக்கு உட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை(30) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 13 பேருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .