2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

’தோட்டத் தொழிலாளியின் பிள்ளைக்கு இ.தொ.காவில் இடமில்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில், தோட்டத் தொழிலாளியின் பிள்ளைகளுக்கு இடமில்லை என்பது, அக்கட்சியின் அண்மையச் செயற்பாடு வெளிப்படுத்தியுள்ளதாக, நோர்வூட் பிரதேசசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணித் தலைவருமான சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா, வாரிசு அரசியலில் மூழ்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் பணிப்புரியும் மலையக இளைஞர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  தான் ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன் என்பதாலேயே, அமைச்சர் திகாம்பரம் தனக்கு இளைஞரணி தலைவர் பதவியை வழங்கினார் என்றும் தோட்டத் தொழிலாளியின் பிள்ளைகளுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இடமில்லை என்றும் அக்கட்சி, தொண்டமான்களின் கட்சியாகவே மாறிவிட்டது என்றும் கூறினார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர் பதவிகளில் மகனையும் மருமகனையும் அமரவைக்கும் அக்கட்சிக்கு, தொழிலாளிகளின் பிள்ளைகளிடம் வாக்கு கேட்பதற்கு, எந்தத் தகுதியும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் பிறந்து, இங்கிலாந்தில் படித்து சொகுசு வாழ்கை வாழும் இ.தொ.காவின் வாரிசுகளுக்கு, லயத்தில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளைப் ​புரிந்துகொள்ள முடியாதெனவும் அமைச்சர் திகாம்பரம், தொழிலாளர்களின் பிள்ளைகளை ஊக்குவித்து, அவர்களை உயர் பதவியில் அமர வைத்து அழகுப்பார்ப்பவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .