Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூன் 02 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
லுணுகலை, சோலன்ஸ் பெருந்தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள நூறு ஏக்கர் தேயிலைக் காணியை, வெளியாள் ஒருவர் சொந்தம் கொண்டாட முனைவதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இவ்விடயம் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கொழும்பில் பேச்சுவார்த்தையில் இன்று(03) ஈடுபடவுள்ளதாகவும் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படுமென்றும், வடிவேல் சுரேஷ் எம்.பி அறிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹப்புகஸ்தென்னை பிளான்டேசனின் பொறுப்பிலுள்ள லுணுகலை, சோலன்ஸ் பெருந்தோட்ட மேற்பிரிவின் நூறு ஏக்கர் தேயிலைக் காணி, தமக்கு சொந்தமானதென்று, அப்பகுதியிலுள்ள பத்தினி தேவாலயத்தின் பொறுப்பாளர், உரிமைத் தலையீடு செய்துள்ளார்.
இந்தக் காணிக்குள், 40 தொழிலாளர் குடும்பங்கள் வாழும் லயக் குடியிருப்பு, தோட்டத் தொழிற்சாலையின் ஒரு பகுதி என்பனவும் உள்ளடங்குகின்றன.
குறிப்பிட்ட 100 ஏக்கர் தேயிலைக் காணி, புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் தோட்டக் கம்பனிக்கு பொறுப்பல்லவென்று, தேவாலயத்தின் பொறுப்பாளர் அறிவித்ததால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் தோட்டத் தொழிலாளர்கள், பதுளை மாவட்ட எம்.பி.வடிவேல் சுரேஷின் கவனத்துக்கு கொண்டுச்சென்றதையடுத்து, வடிவேல் சுரேஷ் எம்.பி இவ்விடயத்தில் உடனடியாக தலையீடு செயததுடன் குறிப்பிட்ட தேயிலைக் காணிக்குள் பிரவேசிக்க, தொழிலாளர்களுக்கு எவரும் தடைவிதிக்க முடியாது என்றும் அறிவித்தார்.
காணி விவகாரம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பணிமனையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படுமென்று அறிவித்த அவர், ஹப்புகஸ்தென்னை பிளான்டேசன் முகாமைத்துவ நிறைவேற்றுப் பணிப்பாளர், சோலன்ஸ் பெருந்தோட்ட முகாமையாளர், பிரச்சினைக்குரிய பத்தினி தேவாலயப் பொறுப்பாளர் ஆகியோரையும் உரிய ஆவணங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வருகைமாறு, அவர் கேட்டுக்கொண்டார்.
58 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
58 minute ago
1 hours ago