2021 மே 06, வியாழக்கிழமை

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 நவம்பர் 26 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன், செனன் தோட்ட ஜீ.டி பிரிவின் தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு கோரி, தோட்டத் தொழிலாளர்கள் இன்று (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இத்தோட்டத்தின் தேயிலை மலையானது, சுமார் ஒரு வருடமாக பராமறிப்பின்றி காடாகி காணப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், தேயிலை செடிகளில் விஷ பூச்சிகள், பாம்புகள் காணப்படுவதால் தொழிலுக்கு செல்வதில் அச்சநிலையை எதிர்கொண்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எனவே, தொழிலாளர்களின் நலன்கருதி  தேயிலை செடியின் பாராமரிப்பை முறையாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .