2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

தீயில் கருகி இளைஞன் பலி

Kogilavani   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், டி.ஷங்கீதன், ஆர்.ரமேஸ்,மொஹொமட் ஆஸிக்

நுவரெலியா யுனிக் விவ் பகுதியிலுள்ள கூடராமொன்றில்;, நேற்று இரவு ஏற்பட்ட தீயில் கருகி, 22 வயது இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உலப்பனையைச் சேர்ந்த ஜெயரடண் அபுகொட என்பவரே உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா யுனிக்விவ் பகுதியில்  200 படுக்கை அறைகளைக் கொண்ட பாரிய உல்லாச விடுதி ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரத்திலே, திடீரென தீ பரவியுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தப்போதிலும், இளைஞனை காப்பாற்ற முடியாமல் போனதாக பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .